நீ கடவுளில்லை!


துண்டாக சிதறிக்கொண்டிருக்கிறது
எதிர்கால வாழ்வியல்!
உன்னாலேயே உருவாக்கப்பட்டது
உனக்கான எல்லைகள் - அது
விரிவடைந்து விட்டதாகவே
கற்பனைகளுக்குள் மூழ்கிவிட்டாய்!

நீ இரவலாய் வந்த வெற்றுடல்
புகழிடம் தேடிய நீயுமொரு வந்தேறி;
குழுமியிருந்த பலரால் விரட்டப்பட்டும்
உடலால் சிலரை வென்றாலும்
உன் காலடி யாருக்கு சொர்க்கம்?

பெரும்பணத்துக்கும் சிறுபுகழுக்கும்
சிலருடல் அடிமைசாசனம்!
நீ மதம் கொண்ட மானுடம்
ஆன்மீகம் உன் ஆறுதல்
பலர் மனம் கொன்ற வெண்ணுடல்;
உன்னை கட்டுப்படுத்த
கேடயமென்ற ஆயுதம் வீண்
புரிந்து கொண்டோம்;
தன்னையே அழித்துக் கொள்ளும்
நீ ஆணவத்தீ !

பிழை செய்து கொண்டே
பெரும்துரோகம் செய்கின்றாய்
உன்மீதான மாயை 
புகழ் பதவி உயிருடல் என்ற இத்யாதிகளின்றி
நீயுமொருநாள் இல்லாதிருப்பாய்;
அதன் பின்னும் 
உனக்கும் சில நினைவேந்தல் நிகழ்வு
ஊருக்கொன்று நடைபெறும்
ஆனாலும் நீ கடவுளில்லை! 


- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

3 comments:

Kalairajan Krishnan said...

“உயிருடல் என்ற இத்யாதிகளின்றி
நீயுமொருநாள் இல்லாதிருப்பாய்....“

இல்லாதவர் எப்படியிருக்க முடியும்?

அருமையான வாசகம்.
“இல்லாதிருப்பாய்“

பாராட்டுகள்.

அன்பன்
கி.காளைராசன்

இரா.ச. இமலாதித்தன் said...

ஃப்ளக்ஸ் கலாச்சாரத்தால் இருப்பாருன்னு சொல்ல வந்தேன்.

வந்தவர் கோடி
போனவர் கோடி
மக்களின் மனதில் நின்றவர் யார்?

மக்கள் மனதில் இருப்பாருன்னு சொல்ல வந்தேன். அவ்வ்வ்வ்வ் ;)

தமிழன் said...

உங்களுடைய பதிவுகள் அருமை, அடியேனும் இராஜகுல அகமுடையார் குலத்தைச் சார்ந்தவன் அந்தமான் தீவுகளிலிருந்து உங்களை தொடர்பு கொள்கிறேன். எனக்கு அகமுடையார் இனத்தின் முழு வரலாற்றையும் அறிய வேண்டும் என்பதில் ஆர்வமுடன் இருக்கிறேன் .இந்த வம்சா வழி எங்கிருந்து பயணித்தது அவர்களின் பூர்விகம் என்ன அகமுடையார் என்பது முதலியார் மற்றும் உடையார் என்றெல்லாம் எவ்வாறு மாறியது என்ன வரலாறு என்பதை அறிவதற்கு ஏதாவது புத்தகம் உள்ளதா என்பதையும் தெரியப் படுத்தவும் .
http://andamantamilan.blogspot.com
spsraja3@gmail.com

Post a Comment