வாடகை வீடு!

யாரோ ஆண்டவனாம் 
சிலகாலம் மனிதர்களோடு 
வாழ்ந்துவிட்டு போகலாமென 
பூமிக்கு வந்திருப்பதாய்
விடிகாலை கனவில் வந்து 
நாரதன் ஒருவன் சொல்லி சென்றான்;
அவனைத்தேடி நான் போக எத்தனிக்க 
வாசலுக்கு வெளியே யாரோ ஒருவன் 
வாடகைக்கு வீடுத்தேடி 
விசாரித்து கொண்டிருந்தான்;
நான் காலி செய்த வீட்டையே 
அவனுக்கு சொல்லிவிடலாமென தோன்றிற்று; 
வணக்கம் வைத்து வரவேற்று 
அவனுக்கான வீடு நோக்கி நகர்ந்து சென்றோம்!

வள்ளுவனே வாடகைக்கு குடிபுகுந்தால்
குறளில் சொல்லாத நான்காம் அதிகாரம் 
அவனையும் சோதித்து பார்க்கலாம்;     
அறம் பொருள் இன்பத்தோடு  
வீடுபேறே கிடைத்தாலும் 
சொந்த வீடில்லாமால் வாழ்வது வீண் 
என்றிருப்பானென்றேன்;
மறுதலிப்பு ஏதுமில்லாமல் 
என்னை பார்த்து புன்னகைத்தான் அவன்!
 
விலை நிலங்களெல்லாம் மனைகளாவதற்கு  
வாடகை தந்தும் வசவுகளை வாங்கும் 
இடைநிலை குடும்பத்தினருக்கு   
சொந்தமாய் ஒரு வீடு இல்லாததுதான்
காரணமாய் இருந்திருக்கலாமென்றேன்;
ஒன்றுமே சொல்லவில்லை அவன்
தலையை கூட சற்று தாமதமாகவே ஆட்டினான்!

ஆண்டவனாகவே இருந்தாலும்
வீட்டு உரிமையாளரிடம் 
அடிபணிந்துதான் போகவேண்டுமென்றேன்;  
இதுபோல பல இலவச அறிவுரைகளை 
கேட்டுக்கொண்டிருந்தவன்  
வெகுநேர மௌனத்திற்கு பிறகு
பேச தொடங்கினான்; 
நானே ஆண்டவன் தானென்றான்!
நாரதன் சொன்னது நினைவுக்கு வந்தது 
ஆச்சரியத்தோடு அவனை பார்த்து  
கட்டியணைத்து ஆறுதல் சொன்னேன்
விதி வலியதென்று!

கண்கள் விழித்து பார்த்தேன் 
இப்போதுதான் கனவு முடிந்திருக்கிறது போல;   
உண்மையிலேயே வாசலுக்கு வெளியே 
யாரோ காத்துக்கொண்டிருப்பது போலிருந்தது; 
ஒருவேளை அவர்  
வாடகை வசூலிக்க வந்த 
வீட்டு உரிமையாளராக இருக்கலாம்! 

- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை...

நல்ல கனவு...

VALLARASAN.M NATTAR said...

Very good to read and realise.


Thank you BALAJI

VALLARASAN

VALLARASAN.M NATTAR said...

Very good to read and realise.


Thank you BALAJI


VALLARASAN

Kumaresh said...

மிகவும் சிறப்பாய் இருக்கிறது பங்காளி.. உங்களது தமிழ் பற்றும், புலமையும் மெய் சிலிர்க்க வைக்கின்றது..! வாழ்த்துக்கள்..

Kumaresh said...

மிகவும் சிறப்பாய் இருக்கிறது பங்காளி.. உங்களது தமிழ் பற்றும், புலமையும் மெய் சிலிர்க்க வைக்கின்றது..! தொடர்ந்து கிறுக்குங்கள்.. வாழ்த்துக்கள்..

Oz said...

Great Blog my friend, congratulations.
Follow me here:
http://cinemarcial.blogspot.com/

jaisankar jaganathan said...

நண்பரே உங்கள் சொந்த வீடு என்ன ஆனது?

Post a Comment