யார் நீ?
வண்ணங்கள் நிரப்பிய பாத்திரத்தில்
தூரிகையை நனைத்தெடுத்து
குரலில் உன் உருவம் வரைந்தேன்...
வண்ணங்களில் என்ன நிறமென்று
வரையறுக்க முடியாத புத்தம்புது வடிவமாய்
என்மன காகிதத்தில் பிரதிபலித்தாய்...
இப்போதாவது சொல் நீ
காட்சிப்பிழையா...? கானல்நீரா...?
- இரா.ச.இமலாதித்தன்
காதல் மந்திரம்!
கா
ந்தர்வம் உன் பெயரில் உள்ளதடி
அ
ய
ராது ஒலிக்கிறதே என்காதில் நித்தமடி
இதை
த்
தான் இரவில் என் கனவிலும்
உச்ச
ரி
த்தேன் நானும் உன்மேல் பித்தனடி!
- இரா.ச.இமலாதித்தன்
சுவடுகள்!
பள்ளியில் படிக்கும்போதே
பட்டதாரி ஆகியிருந்ததாய்
காலங்களின் தழும்புகளாக
நான் காயப்படுத்திய சுவடுகள்
தென்பட்டு கொண்டிருக்கிறது
ஊரோர ஆலமரத்தில்!
- இரா.
ச.இமலாதித்தன்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)