சிலைகளில் இறைவன்!

மாயை சூழ்ந்திருக்கும்
சிலையை கவனித்துக் கொண்டிருந்தேன்
உடலை சிலிர்க்கும்
உருவமொன்று உருவாகிக்கொண்டிருந்தது;

மௌனித்துக் கொண்டிருந்த உதடுகளும்
மெல்லியதாய் முனுமுனுக்க தொடங்கின
செவிக்கொடுத்து கேட்க தொடங்கினேன்
மனம் மட்டுமே புரிந்து கொண்டது;
சட்டென்று கரங்கள் இரண்டும்
வணங்க ஆயத்தமாயின
உணர்ந்து கொண்டேன்
உருவம் கடந்த இறைவன்
சிலையில் மட்டும் இல்லையென்பதை!

- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

"உருவம் கடந்த இறைவன்
சிலையில் மட்டும் இல்லையென்பதை...."

உண்மை வரிகள் நண்பரே !

இதைத் தான் இந்த லிங்கில் பதிவிட்டுள்ளேன். நன்றி !

திருப்பூவணம் said...

உள்ளத்தில் உறையும் உருவமற்ற இறைவனை,
உணர்வுடையோ ரே உணரமுடியும் இறைவனை, இமலாதித்தனின் இயல்பான எழுத்துக்களின் வழியாகவும் காணமுடிகிறது.
அன்பன்
கி.காளைராசன்

Post a Comment