அழகிய வான் மேகம்!



வானில் ஓர் அழகிய ஓவியம்
மேகத்தூரிகையால் தீட்டப்பட்டு
ஒருசில நொடிகளுக்குள்ளேயே
அது களையவும் ஆயத்தமாகிறது;
கிழக்கின் கீழிருந்து முளைத்த
ஆதித்த ஒளிகற்றையும் மேல் செல்ல
வான்மரத்தின் உச்சியடைந்த நாழிகையில்
மேற்கு நோக்கி பயணப்பட எத்தனித்து
நாளைய வெளிச்சத்தின் அறுவடைக்காக
அது விதையாய் விழுந்துகொண்டிருந்தது;
வெண்மஞ்சள் வண்ணங்களில் இருள்சூழ
இமைகள் போர்த்திய விழிகள்போல
இரவும் மெதுவாய் உலகில் எட்டிப்பார்த்தது;
தங்களுக்குள்ளேயே யார் அழகென்று
நட்சத்திரங்கள் யுத்தமிட்டுகொண்டிருக்க
நிலவு வந்தவுடன் இமைகள் திறந்த விழிகளாய்
வான்வெளியில் வெளிச்சம் படர்ந்ததும்
ஒருவழியாய் அழகுயாரென்ற போட்டியில்
வழமைபோல நிலவே வாகை சூட
நிசப்பதமான நீண்டதொரு பொழுதில்
நட்சத்திரங்களோடு நிலவும்
அழகாய் உறங்க தொடங்கியது

அவளைப்போலவே!

- இரா.ச.இமலாதித்தன்


Post a Comment

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Super poem. மிகப் பிரமாதம் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அருமையான சிந்தனை பாராட்டுக்கள்

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

சீனுவாசன்.கு சொன்னது…

உங்களை புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டம்!உங்கள் கவிதையைப்போல!

கருத்துரையிடுக