காதல் கொஞ்சம்!



--001--

நாற்பது மைல்தூர பேருந்து பயணத்தின்
அன்றைய தருணங்களெல்லாம்
நான்கே நொடிகளில்
கடந்திருப்பதாய் உணர்ந்திருந்தும்
இப்போதைய நான்கு மைல்தூர பயணங்கள்
ஒரு நாளையே விழுங்கிக்கொண்டிருக்கிறது
அருகில் அவளில்லை!

--002--

ஒவ்வொரு பேருந்து பயணங்களிலும்
ஏதோவொரு இருக்கைக்கருகில்
எழுதப்பட்டிருந்த காதலர் பெயர்கள்
சட்டென்று பிம்பமாய் வெளிப்பட்டு
உருமாறி இடம்பெயர்ந்திருந்தது
என்பெயரோடு உன்பெயராய்!
 

--003--

கடவுளிடம் விண்ணப்பித்திருந்தேன்
வருங்கால மனைவி யாரென்று;
பதில் வந்தது நட்சத்திரங்களாய்...
வியந்துபோனேன்;
என் கடவுச்சொல் அவளது பெயரென்பதால்!

- இரா.ச.இமலாதித்தன்


Post a Comment

8 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கடவுச் சொல்லே கடவுளிடமிருந்து நட்சத்திரங்களாய் பதிலாய் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்>

மதுரை சரவணன் சொன்னது…

kadavu sol... super..vaalththukkal

Prabu Krishna சொன்னது…

எழுதி உள்ளதை பார்த்தால் காதல் அதிகம் அன்று தலைப்பு கொடுத்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

இன்றுதான் முதலாவதாக தமிழ்வாசலுக்கு வந்திருக்கிறேன்

அருமையான பதிவுகள்.

கவிதை நன்றாகவுள்ளது.

SURYAJEEVA சொன்னது…

கடவுச்சொல் ரகசியமெல்லாம் போட்டு உடைக்க கூடாதுப்பா..

SURYAJEEVA சொன்னது…

திருவள்ளுவர் சிலையெல்லாம் வச்சிருக்கீங்க பாத்து.. ஆத்தா கண்ணு பட்டுட போகுது..

நிரூபன் சொன்னது…

வணக்கம் நண்பா,
தங்களின் வலைப் பதிவினை, சகோதரன் சேட்டைக்காரனின் வலைப் பதிவு அறிமுகத்தின் மூலம் தரிசிக்கும் பாக்கியத்தினைப் பெற்றேன்..

காதல் உணர்வுகள் பொங்க. காதல் கனி ரசம் ததும்பி வழிய அவளில்லாது பயணித்த பேருந்து நினைவுகளையும்,
அவளை நெஞ்சினில் சுமந்த உங்களின் ஞாபகச் சிதறல்களையும் கவிதையாக்கிருக்கிறீங்க.

இமலாதித்தன் சொன்னது…

தமிழ்வாசல் வழியாக, கிறுக்கல்களை பாராட்டிய,
இராஜராஜேஸ்வரி, மதுரை சரவணன், பலே பிரபு, முனைவர்,இரா.குணசீலன்,சூர்யஜீவா, நிருபன் உள்பட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி...!

கருத்துரையிடுக