வறண்டு போன மண்ணுக்குள்ளும் இறந்து போகும் நாட்கள் எண்ணும் ஒற்றை உயிரை வளர்த்தெடுக்க வறண்ட நிலத்திற்க்குள்ளும் வானில் விழிவைத்து வேரின் வழித் தோண்டி இதழ்கள் கரம் நீட்டி புது வாழ்வை எதிர்நோக்கி இருண்டு போனதொரு செடியின் பயணமும் இனிதே தொடக்கமாகிறது தன்னம்பிக்கையுடன்!
தரிசு நிலங்களுக்கிடையில் அவன் கடந்து செல்கின்ற பல்வேறு திசையெங்கும் பரவி கிடக்கும் ஒற்றை வழி பாதைகளின் தேய்ந்து போன கால் தடங்களெல்லாம் தன் மூதாதையர் விட்டுச்சென்ற வழியென்று அவனுக்கு தெரிந்திருக்கலாம் - ஆனால் அவனது காலணிக்குத்தான் உணரும் பக்குவம் இல்லை அவர்கள் பட்டுணர்ந்த வலியை...!