நீயொரு பகுத்தறிவாதியா?

 
கடவுளில்லையென்றாய்
புதிய பாதை இதுதானென்றாய்
பின்னொருநாள் மதம் பிடிக்காதென்றாய்
சாதியத்தை எதிர்த்தாய்
சடங்குகளை குறைச்சொன்னாய்
இந்து மதத்தை மட்டும் உமிழ்ந்து பேசி
கரவொலி வாங்கினாய்!

கண்டதையெல்லாம் பேசித்தீர்த்தாய்
காணாததையும் கண்டேனென்றாய்   
தானொரு பகுத்தறிவாதியென்றாய்
மதமும்,கடவுளும் பொய்யென்று
மேடைகளில் பரப்புரை பலசெய்தாய்!
 
பிரிவினையில்லாத மதமே இங்கில்லை
என்பதை அறிய மறுத்து அறிவிலியாய்...
வேறெந்த மதங்களையும் எதிர்க்க
திராணியில்லாத வாய்ச்சொல் வீரனாய்... 
தான்சார்ந்த இந்து மதத்தை மட்டுமே குறைக்கூறி
கூச்சலிட்டு குதூகலம் அடையும் 
குறுகிய புத்தியையும் வளர்த்துக்கொண்டாய்!

உன்னருகில் கடந்து போகும் தாசியை
பத்தினியென்று கண்மூடி கிடந்தாய்
உன்னை ஈன்றெடுத்தவள் புறக்கணித்ததால்
தன் தாயின் கற்பின் மீதே களங்கம் பேசி
மேடைகளில் தாசியென்று முழங்கினாய்!

சிலை வழிபாட்டை எதிர்த்தவனுக்கே
காக்கைகள் எச்சமிட
தெருவுக்கொரு சிலை வைத்து
அந்த தலைவனையே கடவுளாக்கிய
போலி பகுத்தறிவியாதிகளின்
இதுபோன்ற மூடச் செயல்களைக்கண்டு
புல்லரித்து புளங்காகிதம்
அடைகிறேன்!

பகுத்தறிவாதியென்ற போர்வையில்
உம் அறியாமையை நினைத்து
குழம்பி நிற்கிறேன் நான்... 

இப்போதாவது சொல்
உண்மையில் நீயொரு பகுத்தறிவாதியா...?            - இரா.ச.இமலாதித்தன்

_

Post a Comment

8 comments:

அண்ணாமலையான் said...

கஷ்டமான கேள்விதான்

ஜெகதீஸ்வரன் said...

உண்மையில் நீயொரு பகுத்தறிவாதியா...?

நிச்சயம் நல்ல கேள்விதான்.

தமிழனை திருடனென சொல்லிவிட்டு, இஸ்லாமியர்களிடம் போய் கூல் குடிக்கும் மக்களையும், கிறித்துவர்களின் ஜப கூட்டத்தில் கொட்டம் அடிப்பவர்களையும் பகுத்தரிவாதிகள் என்று சொன்னால் பெரியார் பாவம் தான்!,..

http://sagotharan.wordpress.com/

ஜெகதீஸ்வரன் said...

சிலை வழிபாட்டை எதிர்த்தவனுக்கே
தெருவுக்கொரு சிலை வைத்து

பல காலமாக பகுத்தறிவாதிகளுக்கு புரியாத ஒன்றை சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.

எல்லா நாத்திகர்களின் தளத்திலும் பர்தா போட்டு பெண்ணை ஏதோ குப்பை போல மூடி வைப்பவர்களை தூக்கி பிடித்து பேசுவார்கள். அவர்களுக்கு ஆணாதிக்கம் மிகவும் பிடிக்கும் போல. பெரியார் கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்கலாம்

KK said...

இது ஒரு நல்ல கேள்வி.. ஆனா இதுக்கும் மொக்கையா ஏதாவது விவாதம் பண்ணுவாங்க..

Vijayan said...

இந்த திண்ணை பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும்.

Guna said...

நானும் இதை தான் கேட்டு கொண்டுஇருக்கிறேன் ஆனால் சரியான பதிலே வருவதில்லை .

Anonymous said...

nice........

maniajith said...

nice

Post a Comment