பெண்ணொருத்தி!

(நான் ஆணாதிக்கவாதியென்ற மனப்பான்மையில் இருந்தாலும் வேலுநாச்சியார் போன்ற வீரமிக்க பெண்களையும் நினைவுபடுத்திக்கொண்டு இந்த மகளிர் தினத்தில் என்னுடைய ஒரு வாழ்த்தையும் பதிவு செய்கிறேன்.)

இனிய மகளிர் தின வாழ்த்துகள்!

ஆண்மகனாய் அவதாரமெடுக்க
தன்னுயிரை ஈந்து பிறப்பெடுக்கச் செய்து
எனக்கோர் புத்துயிர் கொடுத்தாள்
தாயாய் ஒருத்தி!
பள்ளிச்சென்ற பால்ய வயதில்
அடித்தும் அரவணைத்தும்
பாடம் புகட்டி வளர்தெடுத்தாள்
ஆசிரியையாய் ஒருத்தி!
கல்லூரி காலங்களில் கதைகள் பல பேசி
வகுப்புக்கு உள்ளும் வெளியும்
நட்போடு உடனிருந்தாள்
தோழியாய் ஒருத்தி!
வெளியூர் வந்து வேலைசெய்து
பிழைப்பை நடத்திய காலங்களிலும்
உடன்பணி புரிந்து என்னை ஆக்கிரமித்தாள்
காதலியாய் ஒருத்தி!
திருமணத்தால் கரம்பிடித்து
என் வாழ்க்கைக்குள் உட்புகுந்து

புதுப்பயணத்தை தொடக்கிவைத்தாள்
மனைவியாய் ஒருத்தி!
தந்தையென பதவிஉயர்வு கொடுத்து
என்னை பெருமித படுத்தி
பேரானந்தத்தையும் கொடுத்தாள்
மகளாய் ஒருத்தி!

- இரா.ச.இமலாதித்தன் 

Post a Comment

1 comment:

முருகன் said...

கவிதை நன்றாக இருக்கிறது நண்பரே,
தொடருங்கள்..

பின்தொடருபவர்கள் (follower) இணைப்பு கொடுக்கவில்லையா?

முகப்பில் ஏன் அத்தனை பதிவுகளும் வரும் படி வைத்திருக்கிறீர்கள்? உங்கள் தளம் முழுவதும் வர மிகுந்த நேரமாகிறது.. அதிக பட்சம் 3 இடுகைகளை முகப்பில் வைத்தால் போதுமானது..

Post a Comment