அவள் முகம்!



இரு பாதங்கள் படிய
நான் கடந்து போகின்ற
சாலைகளின் பாதையெங்கும்
என் கண்ணெதிரே
தென்பட்ட உருவமெல்லாம்
பிரதிபலிக்கிறது உன் முகத்தை!

இதுநாள் வரை உன்னைநான்

பார்க்கவே இல்லையே...
இருந்தபோதிலும்
காண்கின்ற எல்லாமும்
கவித்துவமாய் என் கண்களுக்கு
காட்சி தருகின்றனவே
கவிதைதான் உன்முகமோ?

மூன்றைந்து நாட்களுக்குள்

முகம் மறைக்கும் நிலவைப்போல்
என்னுலகில் தோன்றவேண்டிய
எனக்கான வளர்பிறையே
எப்போது முகம் மலர்வாய்?

உன் நிழலைக் கூட காணமுடியாமல்

உன் முகத்தை அனுதினமும்
ரசித்துக்கொண்டிருக்கிறேன்...
எனக்கு பிடித்த ஒன்றைப்போல்
உனக்கானதொரு
புத்தம்புது உருவத்திற்குள்
என்னுயிரை பகிர்ந்தளித்து!

- இரா.
ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் தமிழ் ஆதொர்ஸ் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

Post a Comment

1 கருத்து:

க.பாலாசி சொன்னது…

கவிதைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளும் அதன் கோர்வையும் நல்லாருக்குங்க....வாழ்த்துக்களுடன்....

கருத்துரையிடுக