காதல் என்பது?



_____________________

001.


உன்னிடம் சொல்ல நினைத்து
தவறிப்போன வார்த்தைகளெல்லாம்
நீ குனிந்து நடக்கும் பாதையில்
கீழே சிதறி கிடக்கலாம்;
மெதுவாக கடந்து செல்!

_____________________

002.


ஆண் பெண்
நட்பின் முக்தி
காதல்!

_____________________

003.


ஒரு சிலருக்கு
கல்லறை
வேறு சிலருக்கு
கோவில் கருவறை
காதல்!

_____________________

004.


புனிதம்
என்ற சொல்
பூர்த்தியானது
காதலை
தியாகம் செய்யும்போது!


- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

2 கருத்துகள்:

கலையரசன் சொன்னது…

//உன்னிடம் சொல்லநினைத்து
தவறிப்போன வார்த்தைகளெல்லாம்
நீ போகிற பாதையில்
கீழே சிதறி கிடக்கும்
கொஞ்சம் அதை மிதிக்காமல்
கடந்து செல்...!..//

எப்படி பாஸ்? தாவி தாவி கங்காரு மாதிரியா?
:-))))

எல்லாமே அருமை!!

அண்ணாமலையான் சொன்னது…

”ஆண் பெண்
நட்பின் முக்தி
காதல்...!”
இதைத்தவிர வேறொன்றுமில்லை

கருத்துரையிடுக