இப்படியுமொரு தேடல்!



நேற்றை தொலைத்து
இன்றைக்குள் நாளையினை தேடும்
நவீன மனிதனின் நாகரீகமென்பது
ஆடை குறைப்பு
தாய்மொழி மறந்து பிறமொழி கலப்பு
பணமென்ற இலக்கு
இப்படி கணக்கீடோடு மட்டுமே
நகர தொடங்கி விட்டன;
மனதை உள்ளடக்கிய மனிதனை
இறைவன் தேடிக்கொண்டிருக்க;
இவனோ
பணத்தில், பணத்தால்
இறைவனை தேடிக்கொண்டிருக்கிறான்;.
இவனது தேடல் 

தினம் தினம்
நடந்து கொண்டேதான் இருக்கிறது
தொலைத்த ஒன்றை
தனக்குள் இருப்பதை தெரியாமலே!

- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

2 கருத்துகள்:

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன் சொன்னது…

நவீனமாக்கப்பட்ட நகரீகவளர்ச்சியடைந்த மனிதனை மாயையுள் ஆழ்த்தி நுதனமாகக் கொல்லவந்துள்ள கருவி கணினி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// பணத்தில், பணத்தால்
இறைவனை தேடிக்கொண்டிருக்கிறான்..... ///

100 % உண்மை நண்பரே !

கருத்துரையிடுக