நாற்பது மைல்தூர பேருந்து பயணத்தின் அன்றைய தருணங்களெல்லாம் நான்கே நொடிகளில் கடந்திருப்பதாய் உணர்ந்திருந்தும் இப்போதைய நான்கு மைல்தூர பயணங்கள் ஒரு நாளையே விழுங்கிக்கொண்டிருக்கிறது அருகில் அவளில்லை!
--002--
ஒவ்வொரு பேருந்து பயணங்களிலும் ஏதோவொரு இருக்கைக்கருகில் எழுதப்பட்டிருந்த காதலர் பெயர்கள் சட்டென்று பிம்பமாய் வெளிப்பட்டு உருமாறி இடம்பெயர்ந்திருந்தது என்பெயரோடு உன்பெயராய்!
--003--
கடவுளிடம் விண்ணப்பித்திருந்தேன் வருங்கால மனைவி யாரென்று; பதில் வந்தது நட்சத்திரங்களாய்... வியந்துபோனேன்; என் கடவுச்சொல் அவளது பெயரென்பதால்!
நொடிகளை கொன்ற நிமிடங்களெல்லாம் சட்டென்று கடந்து போகும் நாழிகைக்குள் தொலைத்த வருடங்களை தேடிக்கொண்டிருந்தது; நாட்களோடு மாதமாய் உருமாறிப்போன வருடங்களும் இலக்கேதுமில்லாமல் எங்கயோ விரைந்து கொண்டிருந்தது; நீண்ட உறக்கத்திற்கு நடுவே கனவுகளாக உயிர் ரகசியமும் தோன்றி மறைகிறது; பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலிந்த சின்னஞ்சிறு பயணத்தின் சுவடுகள் யாவும் ஏதோவொரு வரலாறாக்கப்படுவதற்காகவே உறக்கத்திலேயே கருவாக உட்புகுந்து உடலாக உயிரோடும் உறவாடிக்கொண்டிருந்தது; விழிப்புகளுக்கு அப்பால் நேர்ந்ததையுணர விழிகளுக்குள்ளே காத்திருந்த ஏக்கத்தோடு அழியும் உடலை அறிவு ஆயத்தபடுத்தியது; முடிவிலியாய் நீண்டுக்கொண்டிருக்கும் அழிவில்லா ஒன்றை எதுவென யூகிக்க முடியாமல் பயணமும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது இந்த உடலுக்குள் நான் யாரென்ற தேடல்களோடு!
- இரா.ச.இமலாதித்தன்
இந்த கிறுக்கல்கள் வல்லமை மின்னிதழிலும் பிரசுரமாகியுள்ளது.
தேவதை நீ யென்றதும் பறக்க ஆயத்தமானாள் வரம் கொடுப்பது மட்டுமே தேவதைக்கு அழகென்றேன்; என் பணம் தப்பித்தது!
--004--
அடிக்கடி உன் நினைவிலேயே அலுவல்களை மறந்துவிட்டதாய் அவளிடம் சொன்னேன்... ம்ம்ம் என்றாள்; உன்னையும் ஒருநாள் என்றேன் புரியவில்லை அவளுக்கு!
--005--
நம் முதல் சந்திப்பு நினைவிருக்கிறதா என்றாள்; உன் தோழியோடு உன்னை சந்தித்ததாய் சொன்னேன்.. ஆச்சரியத்தோடு அந்த அளவுக்கு பிடிக்குமா என்றாள்; தோழியை பிடிக்குமென்றேன்! - இரா.ச.இமலாதித்தன்
இது யார் மனதையும் காயப்படுத்துவதற்காக அல்ல; கலாய்ப்பதற்காக மட்டுமே!