சாதிப்பிழை!சாதிகள் இல்லையென்று
எழுத்துகளால் உரைத்தவனை
கவிஞன் என்றான்;
சாதிமத பேதம் இல்லையென்று
மேடையில் முழங்கியவனை
தலைவன் என்றான்;
சாதீய மாயையென்ற
சமுதாயப்பிழை உருவாக
கருவானவனை மட்டுமேன்
இறைவன் என்றான்?
இந்தகேள்விகளோடே
தினந்தோறும் நுழைகின்றான்
கோயிலுக்குள் அவன்!

- இரா.ச.இமலாதித்தன்


Post a Comment

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

தினம் தினம் முகிழ்க்கும் கேள்விகள்

# கவிதை வீதி # சௌந்தர் said...

அதனால் தான் அவர்கள் கல்லாக இருக்கிறார்கள் போல...

# கவிதை வீதி # சௌந்தர் said...

சமுகத்திற்காக கேள்விகளுடன் அசத்தல் கவிதை...

vetha. said...

நல்ல சரியான கேள்விகள்.
Vetha.
http://kovaikkavi.wordpress.com

Post a Comment