சொல்லாத காதல்!வறண்டு கிடக்கின்ற
பாலைவனத்து வெளியினூடே
காய்ந்து நிற்கும்
ஒற்றைமர கிளையின் மீது 
சுடுமணல் காற்றிலேறி
பற்றிக்கொண்ட பறவை போல
ஒட்டிக்கொண்டது
உன்மீதான
எனக்கான காதல்...!


உன் பெயரை
உதடு உச்சரித்து
உரைக்கும் முன்பே
காலங்கெட்டு போச்சுதென்று
கதை பேசும் கூட்டம் நடுவே 

கூனிக்குறுகி நின்று
என்னைப் பார்த்து
ஏளனமாய் சிரிக்கிறது
நான் சொல்லத்தவறிய

காதல்...!

- இரா.ச.இமலாதித்தன் 
இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது._

Post a Comment

No comments:

Post a Comment