விழிகளை வானம் ஏமாற்றிக்கொண்டிருக்க
நீலத்தை நோக்கி பயணிக்க தொடங்கின பார்வைகள்;
வரையறுக்கப்படாத இலக்கின் தூரம்
மெல்லமெல்ல நீண்டுக்கொண்டே
வண்ணங்கள் ஏதுமில்லா காட்சிப்பிழையாய்
சிதறிக்கிடந்த நீலமெல்லாம் நீர்த்துக் கொண்டிருந்தன;
பார்வைகள் விசாலமாய் பரந்து விரிய
பழைய படிப்பினைகளெல்லாம் படிக்கட்டுகளாய்
புதிய பரிமாணத்தோடு வெளியெங்கும் பரிணமித்திருந்தன;
கனவுகளை காட்சிகளாய் வடிகட்டி
கணக்கிட தெரிந்த விழிகளும்
வெகுநேரமாய் இலக்கை துலாவிக் கொண்டிருந்தன;
தேடலே வாழ்வியல் ரகசியமென்பதை
இன்னமும் அது புரிந்து கொள்ளவில்லை!
- இரா.ச.இமலாதித்தன்
3 கருத்துகள்:
கனவுகளை காட்சிகளாய் வடிகட்டி
கணக்கிட த் தெரிந்த விழிகளும்
வெகு நேரமாய் இலக்கை துலாவித் துலாவிப் பார்த்தேன்.
கண்ணுக்குள் கண்ணாக காணக்கிடைத்தது.
தேடலே வாழ்வியல் ரகசியம்,
ஆம்,
தேடினாலும் தேடலே விடையாய்த் தேடிவருகிறது.
அன்பன்
கி.காளைராசன்
நல்லா இருக்குங்க !
நல்லாய்யிருக்கின்றது தொடருங்கள் .....யாழ்புத்தன்
கருத்துரையிடுக