இரு மாதங்களாகவே களைக்கட்டிய
திருவிழாக்கோலமெல்லாம்
இன்றோ வெறுமையாக கிடக்கின்றது;
நெரிசல் நிரம்பிய இரைச்சலின்றி
யாருமற்ற வீதியெங்கும்
தனிமையின் ஓலங்கள் வியாபித்திருந்தது;
சம்பளத்தேதிக்கு முன் வந்துபோகும்
எந்தவொரு சுபவிழாக்களும்
இப்போதெல்லாம் சுணக்கமாகவே கடந்துபோகின்றது;
மூன்று ரூபாய் தினசரி நாளிதழை கூட
வாங்கமுடியாததை உணராமலேயே
தேநீரகத்திலும் முடிதிருத்தகத்திலும்
உலக பொருளாதரத்தை விமர்சிப்பது போல
சுயத்தின் வலியை அறிந்துகொள்ளமலேயே
வேறெங்கேயோயுள்ள அற்ப சுகத்தை
எல்லோரது மனதும் தேடிக்கொண்டிருக்கிறது;
இலவசத்துக்கும் பணத்துக்கும் கையேந்தும்
வாக்காளனாய் தமிழன் வக்கற்று போனதால்
இந்த வருட திருவிழா காலமும்
சென்ற சில வருடங்களை போலவே
இருளிலேயே தனித்து கிடக்கிறது
வெறுமையோடு இருமாதங்களாக!
- இரா.ச.இமலாதித்தன்
இந்த கிறுக்கல் வல்லமை இணைய மின்னிதழிலும் வெளிவந்துள்ளது.
8 கருத்துகள்:
நல்ல கவிதை.
நன்றி.
சுயத்தின் வலியை அருமையாய் படம்பிடித்த கவிதைக்கு பாராட்டுக்கள்...
வாக்கற்ற தமிழனாய் இருப்பது மேல்னு சொல்றிங்க!
வாக்கற்ற தமிழனாய் இருப்பது மேல்னு சொல்றிங்க!
வலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க
கவிதை பந்தலில் இளைப்பாறலாம்
சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்
சூப்பர்......
மொபைல் போன் வைரஸ்..
fine
pandiang - verhal
கருத்துரையிடுக