மழையோடு விளையாடி!வண்ணங்கள் பல கொண்ட
வான்கொண்ட வானவில்லும்
வளைந்து கொண்டு விழிகள் சிமிட்ட
வஞ்சனைகள் நிரம்பி வழியும்
வளங்கள் வறண்ட நிலத்திற்காக
வான் மேகங்களும் யுத்தம் செய்து
வருமழையும் பொழிய தொடங்க
வீட்டுக்கொன்றாய் மழலைகள் கூட்டம்
வெட்ட வெளியிலேயே குளித்து விளையாட
வீதிக்கு வரும்வரை தெரிந்திருக்குமா
விழுவது அமிலமழை யென்று?

- இரா.ச.இமலாதித்தன்