மீனவத் தமிழன்!


தமிழகத்திலுள்ள மீனவன் சுட்டு கொல்லபட்டால் அவனை தமிழனாக மட்டுமே கணக்கில் கொண்டும், அதே மீனவனின் ஓட்டு தேவையென்றால் அவனை இந்தியனாக சித்தரித்து ஓட்டுபோடும் கருவியாக மட்டுமே உபயோகிக்கும் கேடுகெட்ட மத்திய அரசின் கையில் சிக்கி தவிக்கும் இந்தியாவின் குடியரசு தின வாழ்த்துகள்...!கடலுக்குள்ளே உயிர பணயம் வச்சி
பயணம் செஞ்சி கஞ்சி குடிச்சோம்...
வயிறு நிறைஞ்சதா தெரியலையே - எங்க
மனசு கணமும் இன்னும் குறையலையே!

நாங்க யாருன்னே எங்களுக்கும் தெரியலையே
இந்தியனா, தமிழனா ஒன்னுமே புரியலையே
குண்டடிபட்டு இறந்தாலும் தந்தியடிக்கும் அரசு
எங்க நெஞ்சு துடிப்பை காணாதிருப்பதும் ஒரு தினுசு!

வலைவீச கடலுக்குள்ளே பலநாளு போற நாங்க
திரும்பிவர வரைக்கும் ஒருசாமி கூட துணையில்ல...
போன பிறவியில் என்ன பாவம் செஞ்சமோ
இந்த நாட்டினிலே மீனவனா பொறந்துபுட்டோம்!

கடல் நெடுவே உப்பு தண்ணியிலே பயணிக்கையிலே
வேதனையோடு நாங்க சிந்தும் கண்ணீர யார் அறிவா?
நாதியற்று நலிவுற்று போன இந்த மீனவன காப்பாற்ற
எந்த சாமியும் துணையுமில பாவப்பட்ட இந்த பூமியில!

 - இரா.ச.இமலாதித்தன்